நாச்சியாள்

தொழில்நுட்பம் அதிகம் வளராத, சினிமா எடுப்பது பிரம்ம வித்தை என்று நம்பப்பட்ட 1930-களிலேயே... 'கோவலன்’, 'திரௌபதி வஸ்தராபரணம்’, 'குலேபகாவலி’ (எம்.ஜி.ஆர். நடித்த படமல்ல), 'மிஸ்.கமலா’, 'இந்தியத் தாய்’, 'மதுரை வீரன் (எம்.ஜி.ஆர். நடித்த
''இப்பவும் தமிழ் சினிமா உலகத்துல பெண் படைப்பாளிகளோட எண்ணிக்கை, விரல்விட்டு எண்ணற அளவுக்குத்தான் இருக்கு. ஆனா, நூறு வருஷத்துக்கு முன்னயே தென் இந்திய சினிமா உலகோட பெண் ஆளுமையா எங்கம்மா இருந்திருக்காங்கனு நினைக்கும்போது... பெருமை பொங்குது''
- நெகிழ்ந்த மனதுடன் ஆரம்பித்தவர் தொடர்ந்தார்...
''எங்க தாத்தா-பாட்டிக்கு... எங்க அம்மா ஒரே பொண்ணு. தஞ்சாவூர் பக்கத்துல இருக்கற சாலியமங்கலம் கிராமத்துல 1911-ம் வருஷம் பொறந்தாங்க. ஏழு வயசுலயே கல்யாணம் ஆயிடுச்சு. ஏதோ பிரச்னையால பாட்டி வீட்டுக்கே திரும்பிட்டாங்களாம் அம்மா. அந்த சமயத்துல அவங்க அப்பாவும் இறந்து போக, வீட்டுல வறுமை. என்ன பண்றதுனு தெரியாத பாட்டி, திருச்சிக்கு இடம் பெயர்ந்திருக்காங்க. வறுமையிலயே காலத்தைத் தள்ளமுடியாதுனு நினைச்ச எங்கம்மா, 'ஷாமண்ணா ஐயர்’னு அப்போ அங்க ஃபேமஸா இருந்த ஒரு டிராமா கம்பெனியில வாய்ப்பு கேட்கப் போயிருக்காங்க. துன்பத்துலயும் ஒரு அதிர்ஷ்டம் பாருங்க... அந்த நேரத்துல 'நாடகத் தந்தை’ சங்கரதாஸ் சுவாமிகள் அங்க இருந்திருக்கார்'' என்று சின்னச் சிரிப்புடன் தொடர்ந்தார் கமலா.

''தான் நடத்தற நாடகங்களோட முடிவுல சுதந்திரப் பாட்டு பாடுறது அம்மாவோட வழக்கம். ஒவ்வொரு முறையும் போலீஸ் அரெஸ்ட் பண்றதும் வழக்கம். ஆனாலும் பாடுறத நிறுத்தவே இல்லை எங்கம்மா. 'இந்தியத் தாய்’னு சுதந்திர போராட்டத்தைப் பத்தி ஒரு படத்தை தயாரிச்சு, இயக்கினாங்க. அதை வெளியிடுறதுல பல சிக்கல்கள் ஏற்பட்டுச்சு. போராடித்தான் வெளியில கொண்டு வந்தாங்க. எஸ்... ஷீ வாஸ் ஸோ ப்ரேவ் அண்ட் போல்ட் எனஃப்!'' என்றபோது அத்தனை பெருமிதம் கமலாவுக்கு!
''புராண, வரலாற்றுப் படங்கள் நிறைய டைரக்ட் பண்ணினாங்க. 'மிஸ் கமலா’ படம், நான் பொறந்தப்போ, என் பேர்ல எடுத்தது. என் மேல அவ்ளோ பிரியம் அம்மாவுக்கு. என்னையும் ஷூட்டிங் கூட்டிட்டுப் போவாங்க. எம்.என்.நம்பியார், எம்.ஜி.ஆர்., டிஆர்.மகாலிங்கம், எம்.எஸ்.சுப்புலஷ்மி, கே.பி. சுந்தராம்பாள்னு நிறைய பேர்கூட பழகி இருக்கேன். எம்.ஜி.ஆர்., 'பாப்பா’னுதான் என்னைக் கூப்பிடுவார்''
- நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையில் மின்னிய தன் பால்ய கதை சொன்ன கமலாவுக்கு, நாட்கள் வளர வளர தங்களை விட்டு விலகின வெளிச்சத்தைச் சொல்லும்போது குரல் தணிகிறது...
''அம்மா கஷ்டப்பட்டு சம்பாதிச்சு நிறைய சொத்துக்களை வாங்கினாங்க. ஆனா... காலம், கொடுமையானதாச்சே! சினிமா தயாரிப்புல இறங்கி, நொடிச்சுப் போனதால சொத்துக்கள் கரைஞ்சுடுச்சு. அவங்களுக்கு உடம்பும் முடியாம போச்சு. எங்களுக்கு எவ்வளவு கஷ்டம் வந்தப்போவும் சினிமா சார்ந்த யார்கிட்டயும் போய் நின்னதில்ல.
1961-ல எங்கம்மாவுக்கு 'கலைமாமணி’ பட்டம் கொடுத்தாங்க. அப்ப எங்ககிட்ட கார் இல்ல. இந்த விஷயம் தெரிஞ்ச எம்.ஜி.ஆர்., 'என்னோட காரை அனுப்புறேன்... திரும்பவும் கொண்டு போய் விடச் சொல்றேன்’னு சொன்னப்போ, அவ்ளோ நெகிழ்ந்தாங்க அம்மா. அவங்க 'கலைமாமணி’ அவார்டு வாங்கின மெடல்ல இருந்த தங்கத்தை எடுத்துதான், என் பையனுக்கு மோதிரம் செஞ்சு போட்டாங்க. கடைசி வரைக்கும் தன்னோட பொருளாதார நிலையைப் பத்தின கவலையெல்லாம் பெருசா இல்லாமலே 1964-ல இறந்து போனாங்க!''
- ஒரு வரலாற்றுச் சாதனையாளரின் முடிவை, பனித்த கண்களுடன் சொல்லி முடித்தார் கமலா.
படம்: வீ.நாகமணி
மரியாதை செய்யுமா நடிகர் சங்கம்?

''வரலாற்றுல ஆளுமையான, திறமையான மனிதர்கள் அரிதாத்தான் பிறப்பாங்க. அப்படியான ஒரு பிறவி; தமிழ் சினிமாவோட பெரிய பர்ஸனாலிட்டி எங்கம்மா. ஆனா, அவங்க ஃபோட்டோவை நடிகர் சங்கத்துல இன்னிவரைக்கும் வைக்கவே இல்ல.''
''நூற்றாண்டு நேரத்திலாவது இந்த வருத்தத்தைப் போக்கலாமே?'' என்று நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் கேட்டோம். 'இப்ப ஃப்ளைட் பிடிக்கறதுக்காக போயிட்டிருக்கேன்... நீங்க சொல்ற விஷயத்தைப் பத்தி திரும்பவும் நான் உங்ககிட்ட பேசறேன்'' என்று சொன்னார்.
0 கருத்துரைகள்:
Post a Comment