கலைஞ்சு கிடக்கு எங்க பொழப்பு

on Wednesday, September 14, 2011
பட்டாம் பூச்சி வீட்டை 
சுத்தி  சுத்தி பறக்குது
பழனி மாமங்கிட்டயிருந்து கடிதாசி வரும்.... 
தென்னை மரத்துல
தேன் கூடு  கட்டியிருக்கு
ஐஞ்சாறு மாசத்துக்கு முன்னாடி
கல்யாணமாகிப் போன
தேன்மொழி உண்டாகயிருப்பா
கருங்குளவி
நடு வீட்டுக்குள்ள
வந்துருச்சே
வாராத சனி வாசலுக்கு
வரப்போகுதோ
பூச்சிகளின் இயல்பான பறத்தலுக்குள்
வாழ்க்கையின் இன்பதுன்பங்களைத்
தேடி கண்டுபிடிக்க
இப்ப ஊருக்குள்
பூச்சிகளும் இல்ல
விவரம் சொல்ல ஆட்களும் இல்ல
வெறிச்சோடிக் கிடக்கு எங்க ஊரு
பட்டணத்து விதியோரம்
கலைஞ்சு கிடக்கு எங்க பொழப்பு

1 கருத்துரைகள்:

SURYAJEEVA said...

அருமையான சொல்லாடல்..

Post a Comment