தனிமை தின்னும் பூதம்

on Thursday, October 13, 2011
என்னின் தனிமையை
என் முன் நின்று கூச்சமின்றி
தின்றுகொண்டிருக்கிறது காலம்

அதன் பெரும் தீனிக்கு
இறையாகிக்கொண்டிருக்கிறது
என்னின் இளமை

தின்று கொழுத்த காலம்
மீண்டும் மீண்டும்
நாக்கை நீட்டித் துலாவுகிறது

வேறுவழியின்றி
காதல் குறுஞ்செய்தி 
அனுப்புகிறேன்

முன்னர் பலமுறை
காதலை மறுத்த ஒருவளுக்கு
வெட்கத்தின் சுவடு தொலைத்து

3 கருத்துரைகள்:

SURYAJEEVA said...

தனிமை பூதம் இதை விட பெரிய விஷயங்களை செய்யும்,

நிறமில்லா சிந்தனை said...

u r the only person commenting my creations..thank u

அ.முத்து பிரகாஷ் said...

தனிமை தின்னும் பூதம் / தனிமை பூதம்..
இரண்டில் ஒன்றிற்கு இரை நாம்..

Post a Comment