அன்றொரு நாள்
ஒரு மஞ்சள் மாலையில்
நேரெதிர் திசையில்
நெருக்கமாய் அமர்ந்துகொண்டு
என் விரல் பற்றி
மெல்ல நீவி
உதடு ஒட்டாமல்
வார்த்தைகளைப் பரப்பினாய்
அவை அதனையும்
முழு நீல விரசம் என்றேன்
இப்போதும்
அந்த விரசங்களால்
விசிரிக்கொண்டிருக்கிறேன்
என் மனப்புழுக்கத்தை!
1 கருத்துரைகள்:
வார்த்தைகள் வாதைகளை.. பின்னொரு நாளில் கவிதைகளை.. வரவேற்புகள் தோழருக்கு!
Post a Comment