வென்று விட்டது குழந்தை

on Thursday, November 11, 2010
வென்று விட்டது குழந்தை

எதிர்பாராத தருணத்தில்
எதிரே வவது நின்றாய்
உன் மகளுடன்

ஆச்சர்யமும்
அதிர்ச்சியும்
உன் கண்களில்
நிரம்பி வழிந்தது
என் கண்களிலும் கூட

என்ன வார்த்தைகளில்
ஆரம்பிப்பது
உன்னுடனான பேச்சை
என தயங்கி நிற்கையில்

வேஷங்கள் இல்லா
மரன் புன்னகையில் எ
ன்னையும் உன்னையும்
வென்று விட்டது
குழந்தை!

0 கருத்துரைகள்:

Post a Comment