சவால் 13... எங்கே செல்லும் இந்தப் பாதை?
டீச்சர், நர்ஸ், டைப்பிஸ்ட் போன்ற சில வேலைகளை, 'இது பெண்களுக்கான வேலை' என்று வரையறுத்திருந்த சமூகமும், அந்தச் சூழலும் இறந்தகாலமாகி விட்டது! கார்ப்பரேஷன் அலுவலகங்கள் முதல், கார்ப்பரேட் அலுவலகங்கள் வரை எங்கும் பெண்களின் ஆட்சிதான் - இப்போது!

காலம் காலமாக வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்த பெண்கள், வேலை பார்ப்பதற்காக வரும்போது, அவர்களின் ஆளுமை, திறமை மேம்படுகிறது; நாட்டின் வருமானம் உயர்கிறது. அதேசமயம்... வேலை பார்க்கும் இடங்களில் உடலாலும், மனதாலும் பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதுதான் கொடுமை. அவற்றை எதிர்கொள்ள முடியாமல், வேலையை உதறிவிட்டே செல்லும் நிலைமையும் நீடிக்கிறது என்பது கொடுமையிலும் கொடுமை!
பணிக்குப் போகும் பெண்கள் சந்திக்கும் பதின்மூன்றுவித பிரச்னைகள் பற்றிய அக்கறை மிகுந்த ஓர் பார்வை...
1. பாலியல் சீண்டல்கள்: அமைப்பு சாராத தொழில்களான கட்டடத் தொழில், சினிமா - டி.வி. தொழில், அமைப்பு சார்ந்த தொழில்களான அரசு அலுவலகங் கள், மருத்துவமனைகள், ஐ.டி. துறை என எல்லா இடங்களிலும் 'மகளிர் மட்டும்' திரைப்படத்தில் வருவது போல் பாரபட்சம் இல்லாமல் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகின்றனர் பெண்கள். பாலியல் சீண்டல் செய்பவரின் அதிகார பலம், 'வேலை பறிபோய்விடுமோ' என்கிற பயம், பாதுகாப்பின்மை போன்ற பல காரணங்களால் பெரும்பாலான பெண்கள், யாரிடமும் அதைப் பகிர்ந்து கொள்வது கூட இல்லை. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், வழக்கறிஞர்கள் கூட இப்படி பலியான 'கறுப்பு வரலாறு'கள் உண்டு. பணியிடங்களில் பாலியல் வன்முறை தடுப்பு மசோதா நாடாளுமன்ற ஒப்புதல் பெற்று சட்டமானால் தீர்வு கிடைக்கலாம்.
2. பால் பாகுபாடு: பெண் என்கிற ஒரே காரணத்தால் அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி, சம்பள உயர்வு கிடைப்பதில்லை. ஆண் - பெண் பாகுபாடு இல்லாமல் சம்பளம் வழங்க வேண்டும் என 'சம ஊதியச் சட்டம்-1976' (Equal Remuneration Act) சொன்னாலும்... மில், தொழிற்சாலை, விவசாயம் உள்ளிட்ட உற்பத்தி சார்ந்த தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு குறைந்த கூலி என்பது இன்றும் தொடர்கிறது.
3. சரியான வேலை நேரம்: 'வேலையே சரணம்' என்றிருக்கும் பெண்களைக்கூட, மணி ஆறு ஆனதும் அப்படி ஒரு பரபரப்புத் தொற்றிக் கொள்ளும். 'வீட்டுக்கு சீக்கிரமா போய் நைட் சாப்பாடு செய்யணும்' என்கிற வேலைச் சுமையும், 'லேட்டா போனா... வீட்டுல திட்டுவாங்களே' என்கிற பயமும்தான் பல பெண்களின் பெரும் பிரச்னை என்கிறது 'அஸ்ஸோசம்' (ASSOCHAM- The Associated Chambers of Commerce and Industry of India) நடத்தியிருக்கும் சர்வே. இதனைக் காரணமாகச் சொல்லி, வேலைக்கு செல்லும் பெண்களை மனதளவில் நோகடிக்கும் நிகழ்வுகள் இந்தியக் குடும்பங்களில் அதிகம். இதில், வீட்டினரைவிட... அக்கம் பக்கத்தினர் காட்டும் ஆர்வம் அதீதமானது என்கிறது இந்த சர்வே.
4. பயணப் பாதுகாப்பு: 'வேலைக்கு போயிருக்கற பொண்ணு, பத்திரமா வீடு வந்து சேரணுமே...' என்பதுதான் வீட்டில் உள்ளவர்களின் பதைபதைப்பு. மகளிர் பேருந்து, டிரெயினில் லேடீஸ் கோச் என்று வசதிகள் செய்யப்பட்டு இருந்தாலும் பாலியல் தொந்தரவு, பிக்பாக்கெட் போன்ற பிரச்னை கள் பயணத்தின்போது பெண் களை பயமுறுத்தும் தீரா பிரச்னைகளாகத்தான் இருக்கின்றன இன்று வரையிலும்.
5. பிரசவக்கால விடுமுறை: 'பிரசவக்கால நல சட்டம்' (Maternity Benefit Act) பெரும்பாலான தனியார் அலுவலகங்களில் பின்பற்றப்படுவதில்லை, அதனைக் கண்காணிக்க அரசு சார்பில் எந்தச் சிறப்பு ஏற்பாடுகளும் இல்லை என்பதுதான் சோகம்.
6. குழந்தை அரவணைப்பு: 'பிரசவம் முடிஞ்சு மூணு மாசம் ஆயிடுச்சு, ஆபீசுக்குப் போகணும். ஆனா, குழந்தைக்கும் அட்லீஸ்ட் ஒரு வருஷம் வரைக்குமாச்சும் தாய்ப்பால் கொடுக்கணுமே..' என்று வருந் தும் வொர்க்கிங் வுமன்கள்தான் இன்றும் அதிகம். பெண்கள் வேலை பார்க்கும் இடங்களில், குழந்தை காப்பகம் இருக்க வேண்டும் என்று கோர்ட் தீர்ப்புகள் வந் தாலும், அரசு அலுவலகங்களில் கூட காப்பகங்கள் இல்லை.
7. இரட்டை வேலைச் சுமை: வீடு, அலுவலகம் என்று அதிக மான வேலைப் பளுவால், 'இரட்டை சுமை'யுடன்தான் வாழ் கிறார்கள் பல பெண்கள். இது அவர்களை மனநோய்களுக்கு ஆளாக்குகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். ஐ.டி. துறையில் இந்தப் பிரச்னை அதிகம் இருப்பதால்... அங்கு 'ஃபிளெக்ஸி டைம் வொர்க்கிங்', அதாவது, வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பது என்ற கான்செப்டை உருவாக்கத் தொடங்கியுள்ளார்கள்.
8 இரவுநேரப் பணி: பெண் போலீஸ், நர்ஸ், கால் சென்டரில் வேலை பார்ப்பவர்கள்தான் அதிகமாக 'நைட் டியூட்டி' வேலை பார்க்கக் கூடியவர்கள். இவர்களில் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்பது கண்கூடான உண்மை. இன்னொருபுறம், தொடர்ந்து இரவு நேர பணியை செய்யும்போது... உடல் ரீதியான பல பிரச்னைகள் வருகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.
9. திருமணம்: 'இந்த துறைகளில் பணிபுரியும் பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள்' என்று பெரும்பாலான ஆண்கள் ஒரு தவறான அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொண்டு அந்த துறையில் பணிபுரியும் பெண்களை திருமணம் செய்து கொள்ள மறுப்பதும், காயப்படுத்துவதும் உண்மை! மருத்துவத்துறை பணியாளர்கள், சினிமா தொழிலாளர்கள், அழகு சார்ந்த துறைகளில் பணிபுரியும் பெண்களில் பலரும் இந்த வட்டத்தில் சிக்கி, உருக்குலைந்து கொண்டிருப்பவர்கள்.
10 குடும்பநலன்: குழந்தை வளர்ப்பு, குடும்ப நிர்வாகம், சொந்த பந்தங்களுடான உறவு நீடிப்பு அனைத்தும் பெண்களின் கைகளில் பொறுப்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது. வேலைக்குப் போகும் பெண்களால் 'குவாலிட்டி டைம்'மை குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாததால், குறிப்பாக கணவருடன் பகிர்ந்து கொள்ள முடியாதபோது அங்கு 'உறவு தாண்டும் உறவு' சிக்கலும், அது சார்ந்த மனநல பிரச்னைகளும் இன்று அதிகரித்து வருகின்றன. அதன் எல்லையும் தீர்வும் விவாகரத்து என ஆவதால், அங்கு பெண்ணும் அவளை சார்ந்து நிற்கும் மைனர் குழந்தையின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது.
11. ஜீவனாம்சம்: 'வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஜீவனாம்சம் இல்லை' என்று வாதிட்டு ஜெயிக்கிற கணவர்கள்தான் அதிகம். ஆனால், 'பெண் வேலைக்குப் போனாலும், அவருக்கு குழந்தையை வளர்க்க, குடும்பத்தை நிர்வகிக்க போதுமான வருமானம் இல்லை என்கிறபோது, ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்' என்று சமீபத்தில் அதிரடித் தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். இனியாவது, இதற்கு விமோசனம் கிடைக்கலாம்!
12. அவதூறான பேச்சுகள்: அலுவலகங்களில் தங்களின் திறமையிலாலும் அர்ப்பணிப்பு உணர்வாலும் பதவி உயர்வு, அதிக சம்பளம் பெற்றால், 'எப்படினு தெரியாதா..?!' என அவதூறு வார்த்தைகளால் நெஞ்சம் கீறுபவர்கள் எல்லா மட்டங்களிலும் உண்டு. அரசியல், சினிமா, கலைத்துறையில் பணிபுரியும் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை அரசியலாக்கப்படும்; வாய்க்கு அவல் ஆக்கப்படும். இதற்கு பயந்தே அசாத்திய மான திறமையும், அறிவும் இருந் தாலும் பெரும்பாலான பெண் கள் இந்தத் துறைகளில் கால் பதிக்கத் தயங்குகிறார்கள்.
13. சுகாதாரமான கழிப்பறை: பெரும்பாலான அரசு, தனியார் அலுவலகங்களில் பெண்களுக்கென்று தனியாக, சுகாதாரமான கழிப்பறைகள் கிடையாது. 'தண்ணி குடிச்சா, பாத்ரூம் போகணுமே' என்று ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக பாத்ரூம் செல்லாமல், சிறுநீரகத் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள். பெரிய கடைகள், காம்ப்ளெக்ஸ்களில் வேலை பார்க்கும் பெண்களின் பிரதான பிரச்னை, சுகாதாரமான கழிப்பறைகள் இல்லாததுதான்.
பிரச்னைகளை பேசியாகிவிட்டது! தீர்வு..? அது, மாற்றங்களை முன்னெடுக்க வேண்டிய நிர்வாகிகளின் சிந்தனையிலும், திருந்த வேண்டிய கயவர்களின் மனசாட்சியிலும் கிடக்கிறது!
டீச்சர், நர்ஸ், டைப்பிஸ்ட் போன்ற சில வேலைகளை, 'இது பெண்களுக்கான வேலை' என்று வரையறுத்திருந்த சமூகமும், அந்தச் சூழலும் இறந்தகாலமாகி விட்டது! கார்ப்பரேஷன் அலுவலகங்கள் முதல், கார்ப்பரேட் அலுவலகங்கள் வரை எங்கும் பெண்களின் ஆட்சிதான் - இப்போது!
பணிக்குப் போகும் பெண்கள் சந்திக்கும் பதின்மூன்றுவித பிரச்னைகள் பற்றிய அக்கறை மிகுந்த ஓர் பார்வை...
1. பாலியல் சீண்டல்கள்: அமைப்பு சாராத தொழில்களான கட்டடத் தொழில், சினிமா - டி.வி. தொழில், அமைப்பு சார்ந்த தொழில்களான அரசு அலுவலகங் கள், மருத்துவமனைகள், ஐ.டி. துறை என எல்லா இடங்களிலும் 'மகளிர் மட்டும்' திரைப்படத்தில் வருவது போல் பாரபட்சம் இல்லாமல் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகின்றனர் பெண்கள். பாலியல் சீண்டல் செய்பவரின் அதிகார பலம், 'வேலை பறிபோய்விடுமோ' என்கிற பயம், பாதுகாப்பின்மை போன்ற பல காரணங்களால் பெரும்பாலான பெண்கள், யாரிடமும் அதைப் பகிர்ந்து கொள்வது கூட இல்லை. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், வழக்கறிஞர்கள் கூட இப்படி பலியான 'கறுப்பு வரலாறு'கள் உண்டு. பணியிடங்களில் பாலியல் வன்முறை தடுப்பு மசோதா நாடாளுமன்ற ஒப்புதல் பெற்று சட்டமானால் தீர்வு கிடைக்கலாம்.
3. சரியான வேலை நேரம்: 'வேலையே சரணம்' என்றிருக்கும் பெண்களைக்கூட, மணி ஆறு ஆனதும் அப்படி ஒரு பரபரப்புத் தொற்றிக் கொள்ளும். 'வீட்டுக்கு சீக்கிரமா போய் நைட் சாப்பாடு செய்யணும்' என்கிற வேலைச் சுமையும், 'லேட்டா போனா... வீட்டுல திட்டுவாங்களே' என்கிற பயமும்தான் பல பெண்களின் பெரும் பிரச்னை என்கிறது 'அஸ்ஸோசம்' (ASSOCHAM- The Associated Chambers of Commerce and Industry of India) நடத்தியிருக்கும் சர்வே. இதனைக் காரணமாகச் சொல்லி, வேலைக்கு செல்லும் பெண்களை மனதளவில் நோகடிக்கும் நிகழ்வுகள் இந்தியக் குடும்பங்களில் அதிகம். இதில், வீட்டினரைவிட... அக்கம் பக்கத்தினர் காட்டும் ஆர்வம் அதீதமானது என்கிறது இந்த சர்வே.
4. பயணப் பாதுகாப்பு: 'வேலைக்கு போயிருக்கற பொண்ணு, பத்திரமா வீடு வந்து சேரணுமே...' என்பதுதான் வீட்டில் உள்ளவர்களின் பதைபதைப்பு. மகளிர் பேருந்து, டிரெயினில் லேடீஸ் கோச் என்று வசதிகள் செய்யப்பட்டு இருந்தாலும் பாலியல் தொந்தரவு, பிக்பாக்கெட் போன்ற பிரச்னை கள் பயணத்தின்போது பெண் களை பயமுறுத்தும் தீரா பிரச்னைகளாகத்தான் இருக்கின்றன இன்று வரையிலும்.
5. பிரசவக்கால விடுமுறை: 'பிரசவக்கால நல சட்டம்' (Maternity Benefit Act) பெரும்பாலான தனியார் அலுவலகங்களில் பின்பற்றப்படுவதில்லை, அதனைக் கண்காணிக்க அரசு சார்பில் எந்தச் சிறப்பு ஏற்பாடுகளும் இல்லை என்பதுதான் சோகம்.
6. குழந்தை அரவணைப்பு: 'பிரசவம் முடிஞ்சு மூணு மாசம் ஆயிடுச்சு, ஆபீசுக்குப் போகணும். ஆனா, குழந்தைக்கும் அட்லீஸ்ட் ஒரு வருஷம் வரைக்குமாச்சும் தாய்ப்பால் கொடுக்கணுமே..' என்று வருந் தும் வொர்க்கிங் வுமன்கள்தான் இன்றும் அதிகம். பெண்கள் வேலை பார்க்கும் இடங்களில், குழந்தை காப்பகம் இருக்க வேண்டும் என்று கோர்ட் தீர்ப்புகள் வந் தாலும், அரசு அலுவலகங்களில் கூட காப்பகங்கள் இல்லை.
7. இரட்டை வேலைச் சுமை: வீடு, அலுவலகம் என்று அதிக மான வேலைப் பளுவால், 'இரட்டை சுமை'யுடன்தான் வாழ் கிறார்கள் பல பெண்கள். இது அவர்களை மனநோய்களுக்கு ஆளாக்குகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். ஐ.டி. துறையில் இந்தப் பிரச்னை அதிகம் இருப்பதால்... அங்கு 'ஃபிளெக்ஸி டைம் வொர்க்கிங்', அதாவது, வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பது என்ற கான்செப்டை உருவாக்கத் தொடங்கியுள்ளார்கள்.
8 இரவுநேரப் பணி: பெண் போலீஸ், நர்ஸ், கால் சென்டரில் வேலை பார்ப்பவர்கள்தான் அதிகமாக 'நைட் டியூட்டி' வேலை பார்க்கக் கூடியவர்கள். இவர்களில் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்பது கண்கூடான உண்மை. இன்னொருபுறம், தொடர்ந்து இரவு நேர பணியை செய்யும்போது... உடல் ரீதியான பல பிரச்னைகள் வருகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.
9. திருமணம்: 'இந்த துறைகளில் பணிபுரியும் பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள்' என்று பெரும்பாலான ஆண்கள் ஒரு தவறான அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொண்டு அந்த துறையில் பணிபுரியும் பெண்களை திருமணம் செய்து கொள்ள மறுப்பதும், காயப்படுத்துவதும் உண்மை! மருத்துவத்துறை பணியாளர்கள், சினிமா தொழிலாளர்கள், அழகு சார்ந்த துறைகளில் பணிபுரியும் பெண்களில் பலரும் இந்த வட்டத்தில் சிக்கி, உருக்குலைந்து கொண்டிருப்பவர்கள்.
11. ஜீவனாம்சம்: 'வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஜீவனாம்சம் இல்லை' என்று வாதிட்டு ஜெயிக்கிற கணவர்கள்தான் அதிகம். ஆனால், 'பெண் வேலைக்குப் போனாலும், அவருக்கு குழந்தையை வளர்க்க, குடும்பத்தை நிர்வகிக்க போதுமான வருமானம் இல்லை என்கிறபோது, ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்' என்று சமீபத்தில் அதிரடித் தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். இனியாவது, இதற்கு விமோசனம் கிடைக்கலாம்!
12. அவதூறான பேச்சுகள்: அலுவலகங்களில் தங்களின் திறமையிலாலும் அர்ப்பணிப்பு உணர்வாலும் பதவி உயர்வு, அதிக சம்பளம் பெற்றால், 'எப்படினு தெரியாதா..?!' என அவதூறு வார்த்தைகளால் நெஞ்சம் கீறுபவர்கள் எல்லா மட்டங்களிலும் உண்டு. அரசியல், சினிமா, கலைத்துறையில் பணிபுரியும் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை அரசியலாக்கப்படும்; வாய்க்கு அவல் ஆக்கப்படும். இதற்கு பயந்தே அசாத்திய மான திறமையும், அறிவும் இருந் தாலும் பெரும்பாலான பெண் கள் இந்தத் துறைகளில் கால் பதிக்கத் தயங்குகிறார்கள்.
13. சுகாதாரமான கழிப்பறை: பெரும்பாலான அரசு, தனியார் அலுவலகங்களில் பெண்களுக்கென்று தனியாக, சுகாதாரமான கழிப்பறைகள் கிடையாது. 'தண்ணி குடிச்சா, பாத்ரூம் போகணுமே' என்று ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக பாத்ரூம் செல்லாமல், சிறுநீரகத் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள். பெரிய கடைகள், காம்ப்ளெக்ஸ்களில் வேலை பார்க்கும் பெண்களின் பிரதான பிரச்னை, சுகாதாரமான கழிப்பறைகள் இல்லாததுதான்.
பிரச்னைகளை பேசியாகிவிட்டது! தீர்வு..? அது, மாற்றங்களை முன்னெடுக்க வேண்டிய நிர்வாகிகளின் சிந்தனையிலும், திருந்த வேண்டிய கயவர்களின் மனசாட்சியிலும் கிடக்கிறது!
0 கருத்துரைகள்:
Post a Comment