கட்டணக் கொள்ளையே போ...போ... கல்விக் கொள்கையே வா...வா...!
நாச்சியாள்
'பள்ளிக்கல்வி... படிக்கும் மாணவர்களுக்காகவா, கல்வி வியாபாரிகளுக்காகவா... அல்லது அரசியல்வாதிகளுக்காகவா?’ என்கிற பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது... தொடர்ந்து கொண்டே இருக்கும் சமச்சீர் கல்வி வழக்குகளும்... சச்சரவுகளும்!
''சமச்சீர் பாடத்திட்ட புத்தகங்கள்தான் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே உத்தரவிட்ட நிலையிலும், அடிப்படை இலக்கணத்தையும் கணக்குப் பாடத்தையும் நடத்துகிறார்கள் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில். 'டேர்ம் டெஸ்ட்’டும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 'நீதிமன்றம் சொன்னாலும் நாங்கள் நினைத்ததைத்தான் செய்வோம்’ என்று எதேச்சாதிகாரத்துடன் நடக்கும் தைரியத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது, இந்த அரசைத் தவிர?'' என்று ஆவேசக் கேள்வி எழுப்பும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் ரமேஷ் பாபு,
''சமச்சீர் கல்வி அமல்படுத்துவதை மட்டும் நோக்கமாக கொள்ளாமல், தமிழ்நாட்டுக்கென ஒரு கல்விக்

'தமிழ்நாட்டுக்கென ஒரு கல்விக் கொள்கையை உருவாக்க முடியுமா?' என்று முதுபெரும் கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலனிடம் கேட்டோம்.
''1964-ல் இருந்து கட்டணம் இல்லாத கல்வியை மாணவர்களுக்குக் கொடுத்த முதல் மாநிலம் தமிழ்நாடு. அத்தகைய பெருமை உடைய இந்த மாநிலத்தில்தான் இன்று சமச்ச்சீர் கல்வியைக் கொண்டுவர 40 ஆண்டுகளாக பலரும் போராடி வருகிறார்கள். 1901-ல் நம் மாநிலத்தில் 5% என்றிருந்த படித்தவர்களின் எண்ணிக்கை, சுதந்திரம் பெற்றபோது 20 சதவிகிதம் என்று உயர்ந்தது. மாநிலத்தில் படித்தவர்களின் சதவிகிதம் மிக அதிகமாக உயர்ந்தது இலவசக் கல்வி காலக் கட்டத்தில்தான்.
1978-ல் கட்டணக் கல்வியை அறிமுகப்படுத்திய பின்புதான் கல்வி மிகவும் விலையுர்ந்த விஷயம் ஆகிவிட்டது. கல்வி வியாபாரம் ஆகாமல் தடுக்க வேண்டுமென்றால்... நமக்கென ஒரு கல்விக் கொள்கை உருவாக்குவது அவசியம்தான். அது முடியக்கூடிய விஷயமும்கூட! அதன் முதல் படியாகத்தான் இந்த சமச்சீர் கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இது, எல்லோருக்கும் ஒரே விதமான கல்வியைக் கொடுக்கும். இப்படி ஒரு நிலை கட்டாயமாக்கப்பட்டால்தான், பொருளாதார பேதமின்றி திறமையாளர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும்'' என்று சொன்னார்.
இதைப் பற்றிப் பேசிய கல்வியாளர் இரா.நடராசன், ''கல்வியில் இப்போது அரசியல், வியாபாரம் என

தமிழ்நாட்டில் இனி இப்படியான பிரச்னை என்றும் வராமல் இருக்க வேண்டும் என்ற அக்கறையுடனும், கல்வி மற்றும் சமூகத்தை மாற்றியமைக்கும் மிகப் பெரிய சக்தி வாய்ந்த ஆயுதம் என்ற புரிதலுடனும் நமக்கென ஒரு கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டியது அவசியம்'' என்றார்.
''தமிழ்நாட்டில் கல்விக்காக பெற்றோர்களும் மாணவர்களும் வீதிக்கு வந்து போராடிக் கொண்டுஇருக்கும் இந்தக் கணம்... இந்தக் கல்விக்கொள்கை கோரிக்கையும் சேர்ந்து ஒலிக்கட்டும்!'' என்று வழிமொழிந்தார் கல்வியாளர், பேராசிரியர் வசந்தி தேவி.
வீணே கழிந்த நாட்களில் மாணவர்கள் கற்றுக்கொண்ட பாடம்... நம் மாநிலத்தின் வீணாய்ப் போன அரசியல்!
படம்: ஆ.வின்சென்ட் பால்
0 கருத்துரைகள்:
Post a Comment