தொடரும் உறவு சிக்கல்களும் நீளும் தற்கொலைகளும் கொலைகளும்

on Wednesday, October 19, 2011



பத்திரிகைகளி௯லும் செய்தித்தாள்களிலும் செய்தி சானல்களிலும் தொடர்ந்து விடாமல் அடிபடிகிற செய்தி... கணவன் சந்தேகப்பட்டு மனைவி தற்கொலை, கணவனை கொலை செய்த மனைவி, மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து  கொண்ட கணவன் என  வரும் செய்திகளை வெறும் செய்திகளாகப் படித்து விட்டு, நம்மின் அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பிவிடுகிறோம்.

உண்மையில் இந்த குடும்ப உறவு சிக்கல்கள் ஒரு குடும்பத்தோடு முடிந்து போகின்ற பிரச்னையா?அல்லது இது மெள்ள மெள்ள ஒரு சமூகப் பிரச்னையாக உருவெடுக்கிறதா?தமிழ்நாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட   செய்தி சேனல்களும் நிறைய நாளிதழ்களும் இருப்பதால் ஒவ்வொரு பத்திரிக்கையும் சேனல்களும் செய்திக்காக இம்மாதிரியான செய்திகளை தொடர்ந்து  வெளியிடுகிறார்களா என இந்த சிக்கலைப் போலவே பல கேள்விகளும் இதன் மேல் தொக்கி நிற்கின்றன.
இன்றைக்கு சென்னையில் இருக்கும் பல அபார்ட்மெண்டுகளில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்கிற 'லிவிங் டுகெதர்" கலாச்சாரம் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த லிவிங் டுகதர் கலாசாரத்தில் இருவரும் ஒரே வீட்டைப் பகிர்ந்துகொள்வதுபோல் உணவு, நேரம்,வேலை என பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது போலவே அன்பையும் பகிர்ந்துகொள்கிறார்கள் போல. உணவைப் பகிர்ந்து கொள்வதுபோல் தான் இருவருக்குமான உடல்தேவைகளையும் பகிர்ந்துகொள்கிறார்கள்....ஆரம்பத்தில்! 'உனக்கும் வேலை அழுத்தம், மன அழுத்தம்.. எனக்கும் அதே வேலை அழுத்தம், மன அழுத்தம் ..." இதைப் போக்க எளிய வழி... செக்ஸ் என்று முடிவுவெடுப்பவர்கள் அதை ஒரு 'மெட்டிரியல் திங்' ஆக நினைத்து அதை அணுகுவதால் அது கடைசி வரை வெறும் உடல்தேவை பிரச்னையாக முடிந்து போகிறது என்று இருவரும் நினைத்து அனுபவித்து விட்டு தங்களுக்கான வாழ்க்கை வரும் போது 'டாட்டா" சொல்லி பிரியும்போது  எல்லாம் சுமுகமாக முடிகிறது. ஆனால், அந்த இருவரில் ஒருவர் அந்த உறவை எமோஷனலாகவும் அதை உடல், வேலை சார்ந்த உறவாக அணுகாமல் உயிர் சார்ந்த பிரச்னையாக  அனுகும்போதும் அங்கு உறவுச்சிக்கல் பிரச்னை ஆரம்பித்துவிடுகிறது.


போன தலைமுறை காதல் என்ற உணர்வுக்கும் உறவுக்கும் கொடுத்த மதிப்பீடு வேறு. இந்த தலைமுறை காதல் என்ற உணர்வை வெறும் எமோஷனல் செண்டிமெண்ட் அணுகுமுறையில் பார்க்காமல், தினசரி தான் செய்கிற பலவிதமான வேலைகளோடு இதுவும் ஒன்று என்று அணுகுமுறையிலும்... அதை மிகவும் உணர்வு சார்ந்து எடுத்து செல்லாததாலும்தான் பல பிரச்னைகள். காரணம், உலகமயமாக்கலுக்குப் பின் வாழ்வியல் மதிப்பீடுகள் வேறு வேறு உருவகம் கொண்டுள்ளன. சொந்த அம்மாவே இறந்துபோனாலும் வாய்திறக்காமல் அழுதுவிட்டுப் போவதுதான் நாகரிகம் என்கிற  'போலி சமூகப் பாடம்' அவனுக்குள் விதைக்கப்பட்டுவிட்டது.
ஒரு ஆராய்சிக்காக தொண்ணுரூகளுக்கு அப்புறம் நிகழ்ந்த காதல் உறவுகளையும் திருமணங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தினால்... ஒருவனுடைய குணம்,மனம்,பழக்க வழக்கங்களைப் பார்த்து காதல் கொண்டதை விட.. அவனுடைய வருமானம், பாங்க் பேலன்ஸ்,சொந்த வீடு போன்றவற்றை பார்த்து காதலிக்கும் குணம்தான் அதிகரித்து உள்ளது. காரணம், உறவுக்கும வாழ்வியல் மதிப்பீடுகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் காணமல் போய், 'எல்லாம் பணமே பணமே' என்கிற அலைச்சலில்தான்  கொலைகளும் தற்கொலைகளும் தினசரி சர்வசாதாரண நிகழ்வுகளாகிவிட்டன.
ஒரு நாட்டில் தொழில்வளர்ச்சி அதிகமாக இருக்கும்போது இதுமாதிரியான கலாச்சார குளறுபடிகளும் தவிர்க்க முடியாதது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஆணும் பெண்ணும் வேலைக்காக இடம்பெயரும்போதும் குடும்பம் ஓந்தம் பாசம் போன்ற உறவுசங்கிளிகளை விட்டு தள்ளியிருக்கும்போதும் இது போன்ற நிகழுவுகளும் உறவுசிக்கல்க்களும்தவிர்க்க முடியாது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். மக்கள் வேலைக்காகவும் போர்,உள்நாட்டுக்குழப்பம் போன்ற காரணக்களால் இடம்பெயரும்போதேல்லாம் உலக உருண்டை பார்த்துப் பழகிப்போன பிரச்னைதான் இது என்றாலும்...இந்த உறவுச்சிக்கல் பிரச்னையில் அதிகம் பாதிக்கப்பட்டு துன்பப்பட்டுக்கொண்டு இருப்பவர்கள்  இளைய சமுதாயம்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இன்னொரு காரணம் வேலை, பொருளாதார வசதிக்காக திருமண வயதும் உயர்ந்துகொண்டே போகிறது. இருபத்தி ஐந்து  வயதுக்குள் திருமணம் செய்வது என்பது இன்று நடுத்தரக் குடும்பத்தில் சாத்தியப்படாத விஷயம். ஆனால் இந்த வயதில்தானே ஹார்மோன் உச்சக்கட்ட ஆர்ப்பாட்டத்தில் இயங்குகிறது....அப்படியானால் என்னதான் இதற்குத் ந்திர்வு..?
தொடரும்...

1 கருத்துரைகள்:

SURYAJEEVA said...

இதற்க்கு தீர்வு நம்பிக்கை, திடமான நம்பிக்கை... நீ தவறு செய்ய மாட்டாய் என்று திடமாக ஒருவர் இன்னொருவர் மேல் நம்பினால் போதும்... அடுத்தவருக்கு தவறு செய்ய ஒரு பயம் வரும்...

Post a Comment