விளாசும் மேதா பட்கர்
நேர்காணல்
''கூடங்குளம் அணுமின் நிலையம், மக்களின் உயிருக்கு உலை வைத்துவிடும். எனவே அதை மூடவேண்டும்'' என்கிற போர்க்குரல் தென்தமிழகத்தில் வலுத்துக் கொண்டே இருக்கிறது. உயிரையே பணயம் வைத்து போராடிய மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, அங்கே சென்று வந்த 'சமூகப் போராளி' மேதா பட்கர், இந்த விஷயத்தை தற்போது நாடு தழுவிய இயக்கமாகக் கொண்டு செல்லும் முனைப்பில் இருக்கிறார். இதற்காக சென்னை வந்திருந்த அவரைச் சந்தித்தோம்.
''ரஷ்யாவின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் கூடங்குளத்தில் அணு உலை அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், ரஷ்ய விஞ்ஞானிகளே, 'அணுமின்நிலையம் சார்பான நமது தொழில்நுட்பம் பாதுகாப்பானது இல்லை’ என அந்நாட்டு அரசிடம் அறிக்கை சமர்பித்துள்ளார்கள். அந்த அறிக்கைக்கு இன்று வரை மறுப்போ, விளக்கமோ தெரிவிக்கவில்லை ரஷ்ய அரசு.
அணுமின் நிலையத்தில் இருந்து வரும் கதிர்வீச்சானது... மண், நீர், காற்று என்று இயற்கைவள ஆதாரங்களிலும் கலந்துவிட்டால்... அது அழிவதற்கு 40 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். அதுவரை இந்த மண்ணையும், நீர்வளத்தையும் நம்பியிருக்கும் மனிதர்களின் நிலை என்னவாகும்? அதுமட்டுமல்லாமல் கடல்நீரின் வெப்பநிலையும் அதிகரித்து, கடல் வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கும் உபயோகமற்றதாகி விடும்.
இந்த உண்மைகளை உணர்ந்து கொண்டதால்தான், உண்ணாவிரதமிருந்து எதிர்ப்பு காட்டுகிறார்கள் மக்கள். ஆனால், மக்களுக்காக, மக்களின் நலனுக்காக நடத்தப்படும் அரசாங்கமோ... இந்த உண்மைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது'' என்று ஆதங்கப்பட்ட மேதா,
''கூடங்குளம் அணுமின் நிலையத்தால் பாதிப்பு ஏற்பட்டால் அது, கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள கிராமங்களை மட்டுமல்லாமல், கேரள கிராமங்களையும் விட்டு வைக்காது. அதனால்தான் கேரள மக்களும் இதனை எதிர்க்கிறார்கள். 'பல கோடிகளைக் கொட்டி திட்டத்தை ஆரம்பித்த பின்பு அதை எப்படி கைவிடுவது’ என வாதம் செய்கிறார்கள் அதிகாரத்தில் இருக்கும் பெருமக்கள். இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் தலைமுறை தலைமுறையாக மனித வளர்ச்சியும், மண்ணும் நீரும் பாதிக்கப்படும். மண்ணும் மனிதனும் அழிந்த பிறகு யாருக்கு பயன்படப் போகிறது இந்தத் திட்டம்..? இதை புரிந்து கொண்டதால்தான் நார்வே, பின்லாந்து அரசுகள் அந்நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டன. இந்தியாவில் மட்டும் அதை அரசாங்கம் ஆதரிப்பது ஏன் என்றே தெரியவில்லை?
அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி காரணமாக அங்கே 'ஃபுகுஷிமா’ அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட கதீர்வீச்சு அபாயத்தைத் தடுக்க தொழில்நுட்ப கில்லாடியான ஜப்பானே தடுமாறியபோது, போதிய தொழில்நுட்பமும், தொழில்நுட்பம் தெரிந்த அறிஞர்களும் இல்லாத இந்தியாவில் பாதிப்பு வந்தால், யார் பொறுப்பேற்றுக் கொள்வது?'' என்ற நியாயமானக் கேள்வியை முன் வைத்தார்.
நிறைவாகப் பேசிய மேதா பட்கர், ''அணு உலைகளின் ஆபத்தை உணர்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அம்மாநிலத்தில் உள்ள ஹரிபூரில் அமைக்கப்படவுள்ள அணுமின் நிலையத்தைக் கைவிடும் எண்ணத்தில் இருக்கிறார். எனவே, அணு உலைகள் விஷயத்தில் மத்திய அரசு தெளிவான ஒரு முடிவை எடுக்க வேண்டும்'' என்றார் வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து!
அணு உலைக்கு எதிரானப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் கல்பாக்கத்தைச் சேர்ந்த டாக்டர் புகழேந்தி, ''கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து கசியும் கதிர்வீச்சுகளால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுப்புற ஊர்களில் உள்ள மக்களுக்கு புற்றுநோய் அதிக அளவில் இருக்கிறது. இளம்பெண்களுக்கு கரு கலைவது ஒரு சாதாரண நிகழ்வாகவே மாறிவிட்டது. ஊனமும், உடல் குறைபாடுகளும் நிறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2004-ம் ஆண்டின் சுனாமிக்குப் பிறகு அதிகமாகி உள்ளது.
இதற்குப் பிறகும், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் கட்டுவதும்... 'அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானவை’ என சொல்லிக் கொண்டிருப்பதும்தான் வேதனை தருகிறது!'' என்கிறார் வருத்தம் பொங்க.
நாச்சியாள்

''ரஷ்யாவின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் கூடங்குளத்தில் அணு உலை அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், ரஷ்ய விஞ்ஞானிகளே, 'அணுமின்நிலையம் சார்பான நமது தொழில்நுட்பம் பாதுகாப்பானது இல்லை’ என அந்நாட்டு அரசிடம் அறிக்கை சமர்பித்துள்ளார்கள். அந்த அறிக்கைக்கு இன்று வரை மறுப்போ, விளக்கமோ தெரிவிக்கவில்லை ரஷ்ய அரசு.
அணுமின் நிலையத்தில் இருந்து வரும் கதிர்வீச்சானது... மண், நீர், காற்று என்று இயற்கைவள ஆதாரங்களிலும் கலந்துவிட்டால்... அது அழிவதற்கு 40 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். அதுவரை இந்த மண்ணையும், நீர்வளத்தையும் நம்பியிருக்கும் மனிதர்களின் நிலை என்னவாகும்? அதுமட்டுமல்லாமல் கடல்நீரின் வெப்பநிலையும் அதிகரித்து, கடல் வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கும் உபயோகமற்றதாகி விடும்.
''கூடங்குளம் அணுமின் நிலையத்தால் பாதிப்பு ஏற்பட்டால் அது, கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள கிராமங்களை மட்டுமல்லாமல், கேரள கிராமங்களையும் விட்டு வைக்காது. அதனால்தான் கேரள மக்களும் இதனை எதிர்க்கிறார்கள். 'பல கோடிகளைக் கொட்டி திட்டத்தை ஆரம்பித்த பின்பு அதை எப்படி கைவிடுவது’ என வாதம் செய்கிறார்கள் அதிகாரத்தில் இருக்கும் பெருமக்கள். இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் தலைமுறை தலைமுறையாக மனித வளர்ச்சியும், மண்ணும் நீரும் பாதிக்கப்படும். மண்ணும் மனிதனும் அழிந்த பிறகு யாருக்கு பயன்படப் போகிறது இந்தத் திட்டம்..? இதை புரிந்து கொண்டதால்தான் நார்வே, பின்லாந்து அரசுகள் அந்நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டன. இந்தியாவில் மட்டும் அதை அரசாங்கம் ஆதரிப்பது ஏன் என்றே தெரியவில்லை?
அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி காரணமாக அங்கே 'ஃபுகுஷிமா’ அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட கதீர்வீச்சு அபாயத்தைத் தடுக்க தொழில்நுட்ப கில்லாடியான ஜப்பானே தடுமாறியபோது, போதிய தொழில்நுட்பமும், தொழில்நுட்பம் தெரிந்த அறிஞர்களும் இல்லாத இந்தியாவில் பாதிப்பு வந்தால், யார் பொறுப்பேற்றுக் கொள்வது?'' என்ற நியாயமானக் கேள்வியை முன் வைத்தார்.
நிறைவாகப் பேசிய மேதா பட்கர், ''அணு உலைகளின் ஆபத்தை உணர்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அம்மாநிலத்தில் உள்ள ஹரிபூரில் அமைக்கப்படவுள்ள அணுமின் நிலையத்தைக் கைவிடும் எண்ணத்தில் இருக்கிறார். எனவே, அணு உலைகள் விஷயத்தில் மத்திய அரசு தெளிவான ஒரு முடிவை எடுக்க வேண்டும்'' என்றார் வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து!
மக்களை முடமாக்கும் தொழில்நுட்பம் தேவையா..?

இதற்குப் பிறகும், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் கட்டுவதும்... 'அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானவை’ என சொல்லிக் கொண்டிருப்பதும்தான் வேதனை தருகிறது!'' என்கிறார் வருத்தம் பொங்க.
Thanks to Pasumai vikatan10/10/2011
படங்கள்: கே. கார்த்திகேயன்
0 கருத்துரைகள்:
Post a Comment