உலர்ந்த முத்தங்கள்

on Monday, January 23, 2012



ஆசை ஆசையாய்
நான் பாதிக்கும் முத்தங்களை
கூடலுக்கான சமிஞ்கை என்றே
எப்போதும் அர்த்தப்படுத்திக்கொள்கிறாய்

மொழிபெயர்க்க முடியாத
என் சோகங்களின் பதிவாகவும்
கரை இல்லாமல்
தறிகெட்டு ஓடும்
என் சந்தோஷங்களின்
பதிவாகவும் சமயங்களில்
என் மாதாந்திர உதிரப்போக்கின்
வலிகுறைக்கும் யுக்தியாகவுமே பதியப்படுகின்றன
என்னின்  பல  முத்தங்கள்

பல அர்த்தங்களும் ஆசைகளும்
பொதிந்த ஈரத்தில்
எப்போதும் ஒரேயொரு
அர்த்தத்தை மட்டும்
 நீ தேடுவதால் பல நேரங்களில்
என் ஆசை முத்தங்கள்
ஈரம் அற்றே பதியப்படுகின்றன
வலி கலந்து

1 கருத்துரைகள்:

த.லட்சுமணன் said...

வலி உரைக்கும் அழகான வார்த்தைகள்.. வாழ்த்துகள் தோழி...

Post a Comment