கல்விக் கட்டண சீரமைப்பு, கண்துடைப்புதானோ?! | - |
|
-நாச்சியாள் |
இன்னொரு சேனலைத் திருப்பினால், 'எங்கள் இஷ்டத்துக்குத்தான் கட்டணத்தை வசூலிப்போம். விருப்பமில்லாதவர்கள் வேறு பள்ளிக்குப் போகலாம். எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது' என்று சவால் விடுகிறார் தனியார் பள்ளி ஒன்றின் நிர்வாகி!

இதைப் பற்றி நம்மிடம் காரசாரமாக பேசிய சமூக ஆர்வலர் விஜயலட்சுமி, ''ஒரு பிரச்னைக்காக கமிட்டி என்று அரசு உருவாக்குவதே கண்துடைப்புதான். அதுதான் கல்விக் கட்டணம் தொடர்பாக நீதியரசர் கோவிந்தராஜன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டி விஷயத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. எங்கள் அமைப்பு தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளை பார்வையிட்டுள்ளது. பெரும்பான்மையான பள்ளிகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கவில்லை. வசூலிக்கவும் தயாராக இல்லை என்பதுதான் சுடும் நிஜம்.
அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில், கல்வித்துறை அரசிடம் இருக்கிறது. 'குடி' தனியார் கையில் இருக்கிறது. ஆனால், இங்கு 'டாஸ்மாக்' அரசிடம் இருக்கிறது. கல்வி, தனியார்களின் பிடியில் இருக்கிறது. அந்த ஒரே காரணத்தினால்தான், அவர்கள் அரசுக்கே சவால் விடுகிறார்கள்" என ஆணித்தரமாகச் சொன்னார்.

"அரசு, ஒவ்வொரு தாலூகாவிலும் பெற்றோர், மாணவ அமைப்புகள், அரசு அதிகாரிகள் அடங்கிய நடுநிலையான குழுவை அமைத்து, பள்ளிகளை கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் பிரச்னைக்கு உண்மையான தீர்வு கிடைக்கும். இல்லாவிட்டால்... பெற்றோர் வீதியில் இறங்கி போராடுவதைத் தவிர்க்க முடியாது'' என்று சொன்னார்.
இதற்கு நடுவே, "பேசாம, ஏற்கெனவே இருந்த கட்டணத்தையே வசூலிச்சுட்டு போகட்டும்னு விட்டிருக்கலாம். எதுக்காக இந்தக் கமிட்டியை போட்டாங்கனு புரியலையே?'' என்று தலைசொறிகிறார்கள் பெற்றோர் சிலர்!
ஆமாம்... எதுக்குனு புரியலையே?!
0 கருத்துரைகள்:
Post a Comment