நனவின் வடிவம்

on Thursday, October 13, 2011
என் கனவுகளைத் திருடி 
செல்கிறான் ஒருவன்
தெரிந்தே அனுமதிக்கிறேன்
அவற்றின் எதிர்காலம் கருதி

அவன் கனவுகளுடன்
இரண்டறக் கலந்து
உறங்குகின்றன என் கனவுகள்

நனவின் வடிவம்
பெறாமலேயே

2 கருத்துரைகள்:

Post a Comment